மழைக் குழந்தை பிறந்த கதை கேட்பீர்!
கடல் தந்தையின் தண்ணீர் விந்துகள்
மேக முட்டைகளாய் கருவுற்றது
வான் தாயின் கருப்பையிலே!!
பிறந்த குழந்தை இடியென வெகுண்டு அழ,
மின்னல் கீற்றினைக் கொண்டு வேடிக்கைக் காட்டினாள் வான் தாய்!!
சில்லென்று மரங்கள் சாமரம் வீசி
சுகப்ப்ரசவத்தைக் கொண்டாடின!
குழந்தையைப் பார்த்தவுடன் ஊரெங்கும் குதூகலமே!!
பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்புகள் தொடங்கின!
ஆங்காங்கே கருப்புக் குடைகள் கண்டனம் சொன்னாலும்,
மழைக் குழந்தை மகிழ்ச்சியைக் கொணர்ந்தது!!
பிறப்பின் இரகசியத்தை அறிந்த மனிதன்
அதன் அதிசயத்தை கவனிப்பதில்லை!!
மழைக் குழந்தையை வரவேற்க நடம்புரியும் மயில்களைப் பார்த்து
அறிந்துகொள்ளட்டும் பிறப்பின் அதிசயத்தை !!

5 comments:
அற்புதமான் ,வித்தியாசமான கற்பனை .
பச்சைக் கம்பளம் ,கறுப்புக் குடை கண்டனம் ---நல்ல சொல்லாட்சிகள் .வாழ்க வளர்க .யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டால் இன்னும் கலக்கலாம் .
அப்பா
Thanks appa :) needhaan sollikudukanum yaappu :)
Very nice..pinna,puli kku pirandhadhu poonai aaguma.:))))))
Keep it up
Thanks a lot akka :)
இயற்கையின் படைப்பில்,
அவள் காதல் விண்ணில் விழித்துளியாம் ,
அவன் காதல் மண்ணில் மழைத்துளியாம்,
மனிதர்கள் நாம்,
அக் காதல் கடலில் கலந்த நதியின் உறவாம் !
தமிழின் அழகுமே தனிச்சிறப்பு :)
Post a Comment