Monday, June 17, 2013

பிறப்பின் அதிசயம்!

மழைக் குழந்தை பிறந்த கதை கேட்பீர்!
கடல் தந்தையின் தண்ணீர் விந்துகள்
மேக முட்டைகளாய்  கருவுற்றது
வான் தாயின் கருப்பையிலே!!

பிறந்த குழந்தை இடியென வெகுண்டு அழ,
மின்னல் கீற்றினைக் கொண்டு வேடிக்கைக்  காட்டினாள்  வான் தாய்!!
சில்லென்று மரங்கள் சாமரம்  வீசி
சுகப்ப்ரசவத்தைக்  கொண்டாடின!

குழந்தையைப் பார்த்தவுடன் ஊரெங்கும் குதூகலமே!!
பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்புகள் தொடங்கின!
ஆங்காங்கே கருப்புக் குடைகள் கண்டனம் சொன்னாலும்,
மழைக் குழந்தை மகிழ்ச்சியைக்  கொணர்ந்தது!!

பிறப்பின் இரகசியத்தை அறிந்த மனிதன்
அதன் அதிசயத்தை கவனிப்பதில்லை!!
மழைக் குழந்தையை வரவேற்க நடம்புரியும் மயில்களைப் பார்த்து
அறிந்துகொள்ளட்டும் பிறப்பின் அதிசயத்தை !!