Friday, June 25, 2010

புதுமையான காதலி!!


நியாயமாக ஆண்கள் தான் பெண்களிடம் காதலிச் சொல்லி அசிங்கப் படுவார்கள்...அது காதலைத் தவிர..செருப்பிலோ தொடைப்பைக் கட்டையிலோ சென்று முடியும்....இது 1990 காதல்...

2010 காதலி..ஆண் காதலைச் சொல்லும் வரை பார்த்துகொண்டிருக்காமல் தானே தன காதலை சொன்னாள்...எப்படி??

இப்படித்தான்;)


என்னைவிட பாந்தமாய் உனக்கொருத்தி இல்லை ;
உன்மேல் உள்ள பாசம்-அது உருக்கிவிடும் கல்லை!
மணம் புரிந்த பிறகு நான் செல்வேன் பொறுமையின் எல்லை;
உயிர் போல உன்னை நேசிப்பேன்-மீறமாட்டேன் எந்தன் சொல்லை!

அம்மா தான் உனக்குப் பிரதானம் என்றால் எந்த கோபமும் எனக்கு இல்லை;
காரணம் கேளு- என்றுமே அன்பே நீயே எந்தன் பிள்ளை!
என் அப்பா நாம் சேர்வதை மறுத்தால் வேறு வழியே இல்லை;
நீயே எந்தன் தந்தை என உன் இருப்பிடம் வரும் இக்கிள்ளை!

இவ்வளவும் சொன்ன பிறகு இன்னுமா புரியவில்லை???
காதல் செய்கிறேன் உன்னை...என் முடிவினில் மாற்றமே இல்லை!!:)