ஆம்!ஜன்னலிலிருந்து ஓர் பௌர்ணமி இரவு....
மனதில் இன்பம் பால்நிலாவைப்போல் பொங்கியது....
எனக்கும் காதல் வந்துவிட்டதா?...
ஏன்??! நானும் பெற்றோரின் அன்பு மழையில் மண்ணிலே முளைத்த மனிதக் காளான் தானே?????!
என்னுள்ளே காதல்!இது கண்டதும் வந்த காதல்!...
என்னுள்ளே காதல்!இது கண்டதும் வந்த காதல்!...
எப்போதும் கண்டுகொண்டே இருக்கிறேனே!!!
பேரழகு என்னை கவர்ந்துவிட்டது!!
ஆம்!!மற்றவர்கள் இயற்கை அழகியை நோக்கிக் கொண்டிருக்க....
அங்கே அழகனை உணர்ந்தேன் நான்!!
வெண்ணிலாவின் பின் கண்டேன் அவனை...
என் காதலன்...மேலே..இருளில் தெரிந்தான்!!
கரிய நிற கண்ணன்!!
தினமும் என்னைக் காணும் அவனை இன்று தான் நான் கண்டேன்!
காதலை உணர்ந்தேன்!!
என்னைக் காண அவனுக்கு இத்தனை நட்சத்திரக் கண்களா!?
அவனைக் காண எனக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும்!!
இதோ!!குறும்பு மின்னல் சிரிக்க...மேளதாளத்தோடு வந்துவிட்டான் என்னைக் கைப்பிடிக்க-
மழையாக!!