
"யம்மா பரமேஸ்வரி!!!எப்படிம்மா இருக்க?உன் வீட்டுகாரர் ஆதிசிவன் எப்படிம்மா இருக்காரு?பசங்க கணேசனும் குமரனும் சௌக்கியமா?மலை நாட்டுல வேற இருக்க...குளிரு பழகிடுச்சா?"
"அடியே கமலா!!பூசாரிக்கு அருள் வந்திடுச்சு டி!ஆத்தாவோட பேசறாரே!!!கேக்குதா?!"..இது நீலா...
"ஆமாம் டி!என் புள்ளைக்கு வெளி நாடு போற நேரம் எப்போ வரும்னு கேக்கணும் டி!"இது கமலா!
"அது கெடக்குது!!நம்ம தங்கத்தோட புருஷன் எங்க போனானோ..ஆத்தாகிட்ட கேக்கணும்!!!!"சீரியல் கதாநாயகிக்காக மங்களம் பாட்டி வேண்டிக்கொண்டிருந்தாள்!
"நமக்கு நம்ம ஆளு வொர்க் அவுட் ஆவுமா நு கேக்கணும்...பூசாரி கிட்ட கேட்டுடவேண்டிதான்...ஆத்தா கரெக்ட் டைம் ல தான் வந்துருக்க!!"ரமேஷ் நெஞ்சுக்குள்ள மா மழை!!
"எல்லாரும் மன்னிக்கணும்...வெளிநாட்டுலேந்து பொண்ணு போன் போட்டிருந்தா..அதான் காக்க வெச்சுபுட்டேன்..."
காதிலிருந்த ப்ளூ டூத்ஐ கழட்டிய படியே வெள்ளே வந்தார் பூசாரி!!!!
அடடே!!!